656 You have done everything
You came to the world
Becoming grace even to grace
Becoming the meaning for love
You gave yourself for us
Becoming remedy to darkness
You gave light
In order to rule over us
You were crowned (as our King)
You came to define
What compassion is?
You gave redemption
Even for a worst sinner to be redeemed
In order to give meaning to love
You died on the cross
For the bhaktas to worship
You again resurrected
You called your disciples
To proclaim you to the world
You gave bhakti
For the bhaktas to praise you
You united bhaktas
To see a glimpse of heaven
You gave many boons
For us to live
You called me
To sing about all these
Giving this boon
You made me to sing your praise
You gave a heart
To have firm faith in you
You are happy
As I live in you
When we sing and glorify you
You become very joyful
When we sing your praise
You came amidst us
You said that
This is the meaning for bhakti
You kept us in this world
Only for this
Mathigiri, 31-5-2017, 2.00 pm.
After reading my regular portions of Muktiveda, I took my book to read. But suddenly there came a mood to worship the Lord. Then as usual I wrote this song to worship Him.
656 எல்லாம் செய்தாய்
அருளுக்கு அருளாகி
அவனிக்கு வந்தாய்
அன்புக்குப் பொருளாகி
உன்னையே தந்தாய்
இருளுக்கு மருந்தாகி
ஒளியையும் தந்தாய்
என்றைக்கும் நீயாள
முடிசூடிக் கொண்டாய்
கருணைக்கு இலக்கணம்
காட்டிட வந்தாய்
கயவனும் கடைதேற
மீட்பையும் தந்தாய்
அன்புக்குப் பொருள்கூற
தருவினில் மாண்டாய்
அடியவர் கொண்டாட
உயிர்த்துமே எழுந்தாய்
உலகிற்கு உனைக்கூற
சீடரை அழைத்தாய்
உயர்ந்தோர்கள் துதிபாட
பக்தியைத் தந்தாய்
விண்வாழ்வை புவிகாண
பக்தரை இணைத்தாய்
வேண்டிய வரம்தந்து
எமைவாழ வைத்தாய்
இதையெல்லாம் நான்பாட
என்னையும் அழைத்தாய்
எனக்கிந்த வரம்தந்து
உனைப்பாட வைத்தாய்
உறுதியாய் உனைப்பற்ற
உள்ளமும் தந்தாய்
உன்னிலே நான்வாழ
மகிழ்ச்சியும் கொண்டாய்
துதிபாடி உனைப்போற்ற
மகிழ்ச்சியில் ஆழ்ந்தாய்
துதிபாடும் போதெல்லாம்
நீவந்து நின்றாய்
இதுஒன்றே பக்திக்கு
இலக்கணம் என்றாய்
இதற்கென உலகத்தில்
எம்மையும் வைத்தாய்
மத்திகிரி, 31-5-2017, மதியம் 2.00