812 The responsibility which you gave
I should accept
Understanding clearly
Which you gave
As my responsibility
Along with responsibility
With the strength which you give
I should run
With much patience
Many hurdles
Might come in between
And will try to
Hide the goal
I should run
Towards the goal
With clear understanding
That it belongs to me
But so many other
Greater responsibilities might come
And divert
Our attention
But the greater one
Is the one which you gave?
Knowing that
I should ran clearly
There might be
Several standards
Comparing small and big
Among responsibilities
However it might be small
Whichever you give
I should
Accept it
Abiding in you
Accomplishing it
I should complete
My race
Mathigiri, 27-1-18, 5.15 a.m.
Though we give priority in our work, for me when it comes to responsibility we should not compare between small and great. However small, once given by God we should accept it and try to accomplish it not get deviated when other responsibilities come on our way.
812 நீதந்த பொறுப்பு
பொறுப்பிது என்று
நீதரும் ஒன்றை
புரிந்து நானும்
ஏற்றிட வேண்டும்
பொறுப்புடன் எனக்கு
நீதரும் பெலத்தில்
பொறுமையாக
ஓடிட வேண்டும்
இடையிடை பலவித
குறுக்கீடு வந்து
இலக்கை மறைக்க
முயன்றிடக் கூடும்
இலக்கு எனது
எனநான் உணர்ந்து
அதனை நோக்கி
ஓடிட வேண்டும்
அதனினும் உயர்ந்த
பொறுப்புகள் வந்து
அடிக்கடி திசையை
மாற்றிடக் கூடும்
ஆயினும் உயர்ந்தது
நீதந்த ஒன்று
என்பதை அறிந்து
ஓடிட வேண்டும்
சிறிது பெரிது
இதுவென உலகில்
பலவித வரைகள்
இருந்திடக் கூடும்
எத்தனை சிறிதே
ஆயினும் கூட
எதைநீ தரினும்
ஏற்றிட வேண்டும்
உன்னில் நிலைத்து
அதனை முடித்து
ஓட்டத்தை நானும்
ஓடிட வேண்டும்
மத்திகிரி, 27-1-18, காலை, 5.15