813 Simple ways
As I began to sing about you
I will long to do it more
This bhakta
Need your holy feet (for that)
Once I dance with song
As joy increases
Grace will be
Added along with it
The drum and band
Give their sound
Flute and harp
Adding music
Let us dance
With rhythm
Along with
The music
Composing many songs
With so many tunes
Calling several bhaktas
To sing along with us
Overcome by joy
Singing loudly
Let us remain
In bhakti
Heart will melt
Once we sing with music
As the music joins
Joy will flow
Bhakti will increase
When we sing songs
Songs will join
The bhaktas together
There are many ways
To worship
There are many methods
To bless God
But all will
Merge in song
And how it will
Make you happy
Once we praise you
With few lines
The mind also will
Concentrate to think you
You gave this
Simple means
And you make us to praise you
Through songs
Mathigiri, 29-1-18, 11.10 p.m.
Unlike all other means, singing song is the best and easy method to worship the Lord and to grow in bhakti and to keep unity among bhaktas.
813 எளிய வழி
பாடப்பாட உன்னைப்
பாடிடத் தோன்றும்
பக்தன் எனக்குன்
பதமலர் வேண்டும்
ஆடிப் பாடிட
ஆனந்தம் மேலிடும்
அத்துடன் உனது
அருளுமே கூடிடும்
மத்தளம் முழவும்
ஓசையும் போட
யாழும் குழலும்
இன்னிசைக் கூட்ட
தாள மேளமும்
அதிர முழங்கிட
தையதைய வென
நடனம் ஆடுவோம்
பலவிதப் பண்களால்
பாடல்கள் அமைத்து
பக்தர் பலரையும்
பாட அழைத்து
பரவசம் மேலிட
ஓங்கி இசைத்து
பக்தியில் திளைப்போம்
பதமலர் பணிந்து
இசையுடன் பாட
இதயமும் இளகும்
இன்னிசை சேர்ந்திட
பரவசம் பெருகும்
பாடல்கள் பாடிட
பக்தியும் வளரும்
பக்தரை ஒன்றாய்ப்
பாடலும் இணைக்கும்
வணங்கப் பலவித
வழிகளும் உண்டு
வாழ்த்தப் பலவித
முறைகளும் உண்டு
ஆயினும் பாடலில்
அனைத்துமே இணையும்
எளிதாய் உன்னை
மகிழ்ந்திட வைக்கும்
சிலவரி கொண்டு
உன்னையே துதிக்க
சிந்தையும் வசப்படும்
உன்னையே நினைக்க
இனிய எளிய
வழியினைத் தந்தாய்
இன்னிசையால் உன்னை
துதித்திட வைத்தாய்
மத்திகிரி, 29-1-18, இரவு 11.10