814 You are my mother
My mother won’t you hug me
Wont’ you take me to your feet
Once I take refuge at your feet
Won’t you see this child?
Where is the refuge for me?
Who is there to protect me?
Who is there for the child?
Which cries for the milk?
Though the mother spanks
The child will fall back on her lap
There is no comparison to the mother
Who hugs that child again?
I grew
Only seeing your face
Drinking your grace
I grew in life
I learn to walk
Only holding your hands
I overcome this world
Only walking with you
But like a little child
I will cry
Through that
I will again get more of your love
There is no comparison
For this relationship
It is the right of a bhakta
To receive it
I don’t find
Sweetness in any other relationship
Like the nobleness
That I found in this
Once you come as my mother
As I receive as your child
There is no greater joy
Other than this on this earth
Mathigiri, 2-2-18, 10.45 p.m.
There is no greater relationship than a mother. And when a bhakta reaches the Lord as a child and feels his compassion as a mother, she finds this relationship more noble and blessed than any kind of relationship with the Lord.
814 தாய் நீ
தாய்நீ அணைக்காயோ
தாளினில் சேர்க்காயோ
தஞ்சமென வந்தபின்
தனயனை நோக்காயோ
கதியெனக் எங்குண்டு
காத்திட யாருண்டு
பாலுக்கு அழுதிடும்
குழவிக்கு யாருண்டு
அடித்தாலும் மடிமீது
விழுந்தே அழும்பிள்ளை
அதைமீண்டும் அணைத்திடும்
தாயினிக் கீடில்லை
உன்முகம் பார்த்தே
உருவாகி வளர்ந்தேன்
உன்னருள் அமுதம்
பருகியே வளர்ந்தேன்
உன்கரம் பிடித்தே
நடந்திடப் பயின்றேன்
உன்னுடன் நடந்தே
உலகினை வென்றேன்
ஆயினும் சிறுபிள்ளை
அடம்பிடித் தழுவேன்
அதன் மூலம் மீண்டும்
உன்னன்பை அறிவேன்
இந்த உறவுக்கு
ஈடிணை இல்லை
இதனைப் பெறுவது
பக்தனின் உரிமை
இந்த உறவின்
மேன்மையைப் போல
எந்த உறவிலும்
இனிமை எனக்கில்லை
தாயகிநீ தர
சேயாகி நான்பெற
இதனினும் பேரின்பம்
இகத்தில் எமக்கில்லை
மத்திகிரி, 2-2-18, இரவு 10.45